Skip to content


விக்டோரிய மாநில சிறு வர்த்தகர்களுக்கான பொதுநல மற்றும் மனநல ஆதரவுதவி

விக்டோரிய மாநில வர்த்தகங்களுக்கான பொதுநல மற்றும் மனநல ஆதரவுதவிக்கு $26 மில்லியன் நிதி

இத் திட்டத்தின் விபரங்கள்

‘கொரோனா வைரஸ் (COVID-19)’ நோய்த்தொற்றுத் தாக்கங்களின் ஊடாகக் கடந்துசெல்லும் சிரமங்கள் மிக்க காலத்தில் தேவைப்படும் மனநல ஆதரவுதவியினை சிறு வர்த்தகம் ஒன்றை நடத்திவரும் விக்டோரிய மாநில வாசிகள் இத் திட்டத்தின் மூலமாகப் பெறலாம்.

  • ‘St John ஆம்புலன்ஸ் மனநல மற்றும் நெருக்கடி கால ஆதரவுதவிப் பயிற்சி’

கூடுதல் திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும், மற்றும் இவற்றைப் பற்றிய விபரங்கள் இந்தப் பக்கத்தில் கிடைக்கும்.
உடனடி மன நல ஆதரவுதவியைப் பெற ‘வர்த்தகர் மன நலம்’ ( Mental health in business) எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்.

‘St John ஆம்புலன்ஸ் மனநல மற்றும் நெருக்கடிகால ஆதரவுதவிப் பயிற்சி’

‘வர்த்தகர் நலக் கூட்டமைப்பு’ (Chambers of Commerce) ‘வர்த்தக சங்கங்கள்’ (Business Associations) அல்லது ‘வர்த்தகத் தொடர்புவலைகள்’ (Business Networks) ஆகிய அமைப்புகளில் பதவிகள் வகிக்கும் முக்கிய அங்கத்தவர்களுக்கு ‘St John ஆம்புலன்ஸ் அங்கீகாரம் பெற்ற மனநல மற்றும் நெருக்கடிகால ஆதரவுதவி’க்கான பயிற்சி கிடைக்கிறது.

இப் பயிற்சியானது இதில் பங்குபற்றுபவர்களுக்குப் பின் வரும் விடயங்களில் உதவும்:

  • பொதுநல அல்லது மனநல சவால்களை எதிர்கொள்ளும் உள்ளூர் வர்த்தக சமூகத்தினருக்கு ஆதரவுதவி அளிக்கத் தேவைப்படும் திறன்களை ஏற்படுத்திக்கொள்ள
  • ‘மன நலத்திற்கே முதலிடம்’ என்ற ரீதியிலான ஆதரவுதவியை அளிப்பதற்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் தகுதிச் சான்று ஒன்றைப் பங்குபற்றுனர்ளுக்கு வழங்க
  • சிறு வர்த்தக முதலாளிகளுக்கும், மற்ற சமூக அங்கத்தவர்களுக்குமான பொதுநல மற்றும் மனநல ஆதரவுதவி இருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த.

உங்களுடைய ஆர்வத்தினைப் பதிவு செய்யுங்கள் Register your interest

மேலதிக ஆதரவுதவி

அறிவுரை வல்லுனர்களை அங்கத்தவர்களுக்கு உடனடியாக அளிக்கவும், இன்னலில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வேலைக்-காலப் பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்கவுமென தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களில் மனநல நிபுணர்களும் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பார்கள்,

மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் வர்த்தக முதலாளிகளுக்கு இலவச வர்த்தக அறிவுரையாளர்களையும், நிதிநிலை ஆலோசகர்களையும் அளிப்பதற்காக ‘பொதுநலக் கூட்டாளிகள்’ (Partners in Wellbeing) எனும் அவசரத் தொலைபேசி இணைப்பு விரிவாக்கம் செய்யப்படும்.

இந்த சேவை இயங்கும் நேரங்கள் ஒவ்வொரு இரவும் 10 மணி வரைக்கும், மற்றும் வார இறுதி நாட்களிலும் கிடைக்கும் வகையிலும் விரைவில் நீட்டிக்கப்படும். உங்களுடைய வர்த்தகத்தைப் பற்றி நீங்கள் துயருற்றிருந்தாலோ, படபடப்பாக இருந்தாலோ 1300 375 330-இல் ‘பொதுநலக் கூட்டாளிகள்’ (Partners in Wellbeing) எனும் சேவையினை அழையுங்கள், மற்றும் நீங்கள் வேண்டினால் மொழிபெயர்க்கப்பட்ட சேவைகளையும் நீங்கள் இங்கிருந்து பெறலாம்.

இந்த ஆதரவுதவி சேவைகளின் துவக்கம் ஆகஸ்ட்டு மாதம் ஆரம்பித்து 2022-ஆம் ஆண்டு வரை தொடரும், மற்றும் இந்த சேவைகளுக்கான தேவை மற்றும் எதிர்கால சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட சேவைகள் அமையும்.

இந்தக் கூடுதல் சேவைகளைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும், மற்றும் அவற்றைப் பற்றிய விபரங்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.

Business Victoria -அமைப்புடன் உங்கள் மொழியில் தொடர்புகொள்ள 13 14 50 -இல் TIS National-ஐ அழைத்து, Business Victoria -அமைப்பின் அவசரத் தொலைபேசி இணைப்பான 13 22 15 எனும் இலக்கம் வேண்டுமெனக் கேளுங்கள்.

Close quick view window